சிங்கப்பூரில் ஸூக் இசை மதுபானக் கூடத்தின் நிறுவனரான லிங்கன் செங்கிற்கு, 70, குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்காக ஒரு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி இரண்டு போக்குவரத்துச் சிவப்பு விளக்குகளை மீறிச் சென்று ஒரு டாக்சி மீது வாகனத்தை மோதிவிட்டார். செங் வாகனம் ஓட்டக் கூடாது என்று மூன்றாண்டு லிங்கன் செங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சிங் லிங் கா என்ற லிங்கன் செங், இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார். அவருக்கு $15,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
லிங்கன் செங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

