2022ல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் அறிமுகம்

2022ல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் அறிமுகம்

1 mins read
7637a971-12fb-4d58-afe6-880069e17f41
-

இன்னும் ஐந்தாண்டுகளில் ஓட் டுநரில்லாப் பேருந்துகளை சிங் கப்பூரில் காணமுடியும். குறிப் பாக, சிங்கப்பூரின் மூன்று புதிய நகரங்களில் உள்ள குடியிருப் பாளர்கள் 2022ஆம் ஆண்டு வாக்கில் அந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெறுவர். பொங்கோல், தெங்கா, ஜூரோங் புத்தாக்க வட்டாரம் ஆகியன அந்த மூன்று பகுதி கள் என்று அரசாங்கம் அடை யாளம் கண்டுள்ளது. அந்தப் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் தொழிலா ளர்களும் உச்சநேரமற்ற நேரங் களில் ஓட்டுநரில்லாப் பேருந்து களில் அப்போது பயணம் செய் வர். ஓரிடத்தில் இருந்து மற் றோர் இடத்தை அடைவதற்கான தானியக்க வாகனங்களிலும் அவர்கள் பயண அனுபவத்தைப் பெறுவர். ஓட்டுநரில்லாத வாகனங் களுக்கான முதல் பயிற்சி நிலை யத்தை நேற்று திறந்து வைத்த போது போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் இதற்கான அறி விப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், "தானியக்க வாகனங்கள் நமது பொதுப் போக்குவரத்து முறைக் கான இணைப்புத் திறனையும் அணுகும் ஆற்றலையும் பெரிய அளவில் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார் அவர்.

தனக்கு முன்னால் ஆள்நடமாட்டம் இருப்பதை உணர்ந்து தானே நிறுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தானியக்க வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்