சிங்கப்பூர் அரசியலமைப்புச் சட்டத் திலோ நாட்டின் சட்டங்களிலோ பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது பற்றிய விளக்கமும் அதை தடை செய்வது குறித்தும் பதிவு செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. ஜெனிவாவில் சென்ற மாதம் ஐநா குழுவும் சிங்கப்பூர் அரசாங் கத்தின் பேராளர்களும் சந்தித்து கலந்துரையாடிய நிலையில் செவ் வாய்க்கிழமை ஐநா குழு இந்தப் பரிந்துரைகளை அளித்துள்ளது. பெண்களுக்கான மனித உரி மைகள் ஒப்பந்தம், பெண்களுக்கு எதிரான அனைத்துவகையான பாகுபாட்டை விளக்கும் ஒப்பந்தம் ஆகிய ஐநா ஒப்பந்தங்களின்படி சிங்கப்பூரின் கடமைகளை நிறைவேற்ற அந்தப் பரிந்துரைகள் உதவும்.
பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை தவிர்க்க ஐநா குழு பரிந்துரை
1 mins read

