பொருளியல் 3.5% வரை உயரலாம்

பொருளியல் 3.5% வரை உயரலாம்

1 mins read

சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டில் எதிர்பார்த்ததைவிட அதிக வளர்ச்சி கண்டுள்ளது. மின்னியல் துறையின் சிறப்பான செயல்பாட்டினால் 2017ஆம் ஆண்டுக் கான மொத்த உள்- நாட்டு உற்பத்திக்கான முன் னுரைப்பை வர்த்தக, தொழில் அமைச்சு உயர்த்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்- கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 விழுக்காடு முதல் 3.5 விழுக்காடு வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம், மூலாதாரப் பண- வீக்கம் இரண்டிலும் மாற்றம் இருக் காது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது. அதனால், நிதிக்கொள்கையில் மாற்றம் இருக்காது என்றும் அது கூறியது.