நான்கு வயது மகளை இழந்த தாயாரின் வேண்டுகோள்

நான்கு வயது மகளை இழந்த தாயாரின் வேண்டுகோள்

1 mins read
78391de5-88cc-4369-946b-3d4233cba608
-

புக்கிட் பாத்தோக் சென்ட்ரலில் கடந்த மாதம் நிகழ்ந்த விபத்தில் கொல்லப்பட்ட நான்கு வயது சிறுமியின் தாயார் இன்று வரை தனது மகளின் படுக்கை அறையை தொடாமல் பாதுகாத்து வருகிறார். இந்தத் துயரமான நேரத்தில் சமூக ஊடகங்கள் வழியாக ஒரு வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் ஃபேஸ் புக்கில் வெளியிட்ட தகவலில் தனது மகளின் உயிரைப் பறித்து பணிப்பெண் காயமடைவதற்குக் காரணமான விபத்தில் புரோட் டான் கார் சிக்கியது. அக்டோபர் 9ஆம் தேதி புக்கிட் பாத்தோக் சென்டிரலில் மாலை 6.40 மணி அளவில் விபத்து நிகழ்ந்துள்ளது என்று 24 வயது ஜேசலின் வோங் தெரிவித்திருந்தார்.

"பொதுமக்களை உண்மையாக ஒன்றை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவை மற்ற வர்களுடன் பகிர்ந்துகொண்டு உதவி செய்யுங்கள். விபத்து நிகழ்ந்த இடத்தில் யாராவது இருந்திருந்தால் அன்றைய நாளில் கேமராவில் அந்த காரின் படங்கள் பதிவாகியுள்ளதா என்று சோதித்துப் பாருங்கள்," என்றும் அவர் எழுதியிருந்தார்.

நான்கு வயது மகளுடன் ஜேசலின் வோங். படம்: ஜேசலின் வோங் ஃபேஸ்புக்