டைகர் ஸ்கை டவர் மீண்டும் திறப்பு

டைகர் ஸ்கை டவர் மீண்டும் திறப்பு

1 mins read
1e42ea00-593b-429b-8510-036c82f15e25
-

செந்தோசாவில் உள்ள தி டைகர் ஸ்கை டவர் செயலிழந்து 4 மணி நேரம் 39 பேர் மாட்டிக்கொண்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாதத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது என அதன் பேச்சாளர் ஒருவர் தெரி வித்தார். கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடந்த சம்பவத்தில் பெட்டகத்தை மேலும் கீழும் கொண்டு செல்லும் பாகம் பழுதடைந்ததால் 39 பேர் நான்கு மணி நேரம் மாட்டிக் கொண்டனர் என்பது விரிவான விசாரணையில் தெரிய வந்த தாகவும் புதிய பாகம் பொருத்தப் பட்டுள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

தி டைகர் ஸ்கை டவர். கோப்பு படம்