கிழக்கு- மேற்கு ரயில் பாதையில் அடுத்த ஏழு மாதங்களுக்கு சேவை நேரம் குறைக்கப்படுவதால் அதைச் சமாளிக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதற்கு ஆகக்கூடிய செலவில் ஒரு பங்கை வரி செலுத்துவோர் ஏற்பர். "கூடுதல் பேருந்துகளை இயக்கு வதற்கான செலவில் நிலப் போக்கு வரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் பங்களிக்கும்," என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து இருக்கிறது. ஜூ கூன் - கல் சர்க்கிள் நிலையங்களுக்கு இடையிலான இணைப்புப் பேருந்துச் சேவை களுக்கு ஆகும் செலவுகளுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப் பட்டுள்ளது. இவ்விரு நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நிறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் உள்ள 17 நிலையங்களிலும் வடக்கு-தெற்கு ரயில் பாதையின் இரு நிலையங்களிலும் சேவை நேரம் குறைக்கப்படும் என்றும் டிசம்பர் 10, 17 ஆகிய இரு நாட் களில் அந்த நிலையங்கள் முழு வதுமாக மூடப்படும் என்றும் இந்த வாரத் தொடக்கத்தில் ஆணையம் அறிவித்திருந்தது.
வரிசெலுத்துவோர் பங்களிக்க வேண்டும்
1 mins read

