'ஹோம்டீம்என்எஸ்' மன்றத்தின் புதிய தலைவராக அமைச்சர் ஜோசஃபின்

'ஹோம்டீம்என்எஸ்' மன்றத்தின் புதிய தலைவராக அமைச்சர் ஜோசஃபின்

1 mins read

உள்துறை அமைச்சின் தேசிய சேவையாளர்களுக்கான 'ஹோம்டீம்என்எஸ்' எனும் பொழுதுபோக்கு மன்றத்தின் புதிய தலைவராக உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று அறிவிக்கப்பட்டார். பிரதமர் அலுவலக அமைச்சரும் மனிதவள இரண்டாம் அமைச்சருமான திருவாட்டி டியோ, அதன் முதல் பெண் தலைவராகவும் திகழ்கிறார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சருமான டெஸ்மண்ட் லீயிடமிருந்து திருவாட்டி டியோ தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.