விரைவுச்சாலையில் மின்-ஸ்கூட்டர்

விரைவுச்சாலையில் மின்-ஸ்கூட்டர்

1 mins read

தீவு விரைவுச்சாலையில் நேற்று பயன்படுத்தப்பட்ட மின்- ஸ்கூட்டர் அதன் உரிமையாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித் துள்ளது. விரைவுச்சாலையின் இரண்டாம் தடத்தில் ஓர் ஆடவர் அதனை ஓட்டிச் சென்ற காணொளி பே சியா லோர் ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பகிரப்பட்டது. காலை 9.00லிருந்து 9.30 மணிக்குள் எங் நியோ அவென்யூ வெளிப்பாதைக்கு முன் அந்த ஆடவரை நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் போக்குவரத்து போலிஸ் அதிகாரிகளும் பிடித்தனர்.