அதிபர் சவால் நிதிக்கு சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் $25,000 நன்கொடை

அதிபர் சவால் நிதிக்கு சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் $25,000 நன்கொடை

1 mins read
c877a190-668c-4eae-9b14-f455f4a2b035
-

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூர் வர்த்தக, தொழில் சமூ கத்தில் பொதுவாக வர்த்தக சந் திப்புகளை முன்னிட்டு ஒன்று கூடும் தொழில்முனைவர்கள், இயக்குநர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேற்று 'தீபாவளி இரவு 2017' எனும் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒன்றுகூடி னர். சிங்கப்பூர் சீன, மலாய் வர்த்தக, தொழிற்சபை உறுப்பினர்களுடன் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம், 'ஐஇ சிங்கப்பூர்', 'ஸ்பிரிங் சிங்கப்பூர்' ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை நேற்று ஒன்றுதிரட்டியது சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை. இந்தத் தீபாவளி நிகழ்ச்சி சிங்கப்பூரில் பல்வேறு இன, சம யங்களுக்கு இடையில் நிலவும் ஒற்றுமையைப் பறைசாற்றும் என உறுதி தெரிவித்தார் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் தலைவர் டாக்டர் ஆர். தேவேந் திரன். "பொதுவாக நாங்கள் சிங்கப்பூர் இந்திய வர்த்தகச் சமூ கத்திற்குச் சேவைபுரிந்து வந்தா லும் அண்மைய ஆண்டுகாலமாக பிற இன வர்த்தக, தொழிற்சபை களுடனான உறவை வலுப்படுத்தி யிருக்கிறோம்,"என்றார் அவர்.

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை ஏற்பாடு செய்திருந்த தீபாவளி நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி வைக்கும் அதிபர் ஹலிமா யாக்கோப். உடன் இருப்பவர்கள் சபை இயக்குநர் ஜெயந்தி மணியன், தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன். இடக்கோடியில் திருவாட்டி ஹலிமா வின் கணவர் திரு முஹம்மது அப்துல்லா அல்ஹப்‌ஷி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்