உள்நாட்டுச் சூழலைப் பழகிக் கொள்ள கட்டாயத் திட்டம்

உள்நாட்டுச் சூழலைப் பழகிக் கொள்ள கட்டாயத் திட்டம்

1 mins read

சிங்கப்பூருக்குப் புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்கள் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியிலிருந்து உள்நாட்டுச் சூழலைப் பழகிக் கொள்ள துணை புரியும் கட்டாயத் திட்டத்தில் கலந்து கொள்ளவேண் டும். முதல்முறையாக சிங்கப்பூ ருக்கு வரும் பணிப்பெண்களுக்குத் தற்போது நடத்தப்படும் திட்டத் தைப் போன்றது இது. வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள வும் தங்களது வேலை நியமன உரிமைகளையும் பொறுப்புகளையும் தெரிந்துகொள்ளவும் இத்திட்டம் உதவும் என்று மனிதவள அமைச் சர் லிம் சுவீ சே நேற்று கூறினார்.

ஊழியர்கள் எங்கே, எப்படி உதவி நாட முடியும் என்று அவர்களிடம் தெரியப்படுத்தப்படும். படிப்படியாக அமலாக்கப்பட விருக்கும் இத்திட்டம், கட்டுமானத் துறையில் முதல்முறையாக வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுடன் தொடங்கப்படும் என திரு லிம் தெரிவித்தார். மலே சியர்களுக்கு இத்திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். கடல்துறை, உற்பத்தித்துறை, செயற்பாட்டுத்துறை, சேவைத்துறை போன்ற மற்ற துறைகளிலும் இத் திட்டம் படிப்படியாக அறிமுகமாகும். ஒவ்வொரு மாதமும் கட்டு மானத் துறையைச் சேர்ந்த சுமார் 2,000 வெளிநாட்டு ஊழியர்கள் திட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதி வுக் கட்டணமும் பயிற்சிக் கட்டண மும் முதலாளிகளின் பொறுப்பு.