கடன் அட்டைகளை வைத்து பொருட்கள் வாங்குபவர்கள் தாங் கள் வாங்கிய பொருட்களை மீண் டும் கொடுத்துவிட்டு பணத்தை திரும்பவும் பெறுவதற்கான முறை யான வழிகளைப் பற்றிய வழிகாட் டிக் குறிப்பை 'கேஸ்' எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. முக்கிய அனைத்துலக கடன் அட்டை சேவை வழங்கும் நிறு வனங்களும் உள்ளூர் வங்கிக ளும் வகுத்துள்ள வரையறைகளை ஒட்டியே சங்கம் அதன் வழிகாட்டி முறை அடங்கிய கையேட்டை நேற்று வெளியிட்டுள்ளது. கடன் அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் வாங்கிய பொருட்கள் அவர்க ளுக்கு திருப்தி அளிக்காத நிலையிலோ அவர்கள் கட்டிய தொகையில் சந்தேகம் உள்ள நிலையிலோ தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியும். கடன் அட்டை வழங்கும் வங்கிகளிடம் இதற்கான தெளி வான குறிப்பேடுகள் இல்லை என்பதால் இந்த வழிகாட்டிக் குறிப்பை பயனீட்டாளர் பாதுகாப் புக்காக வெளியிடுவதாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடன் அட்டை பயன்பாட்டுக்கான வழிகாட்டி
1 mins read

