குற்றத்தை ஒப்புக்கொண்ட எம். ரவி

குற்றத்தை ஒப்புக்கொண்ட எம். ரவி

1 mins read
117d1f87-a0c5-41f7-84b5-6b2c978b6f14
-

வழக்கறிஞரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான 54 வயது திருமதி ஜெனட் சோங்=அருள் தாஸை துன்புறுத்தியதாக நீதி மன்றத்தில் நேற்று 48 வயது வழக்கறிஞர் எம். ரவி (படம்) ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 11 மணியளவில் 'தி அடல்ஃபி' கட்டடத்தின் ஏழாம் தளத்தில் நடந்தது. அதே இடத்தில் 42 வயது வழக்கறிஞர் திரு நகூர்ஷா அப்துல் காதர் என்பவருக்கும் காயம் விளைவித்ததை அவர் ஒப்புக்கொண்டார். வழக்கறிஞராகச் செயல்படுவ தற்கு தேவையான சான்றிதழைப் பெறுவதற்கான தகுதியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு திரு ரவி இழந்துள்ளார். அவரது நண்பர் லாய் யூ தியாம் உடன் இணைந்து 'யுஜின் துரைசிங்கம்' சட்ட நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் ஜூன் மாதம் 27ஆம் தேதி சட்டவிரோதமாக அவர் புகுந்துள்ளார். மாரியம்மன் கோயிலில் தவறான முறையில் நடந்துகொண்ட தற்கு இரண்டு குற்றச்சாட்டுகளும் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் தண்டனை வழங்கும்போது கருத் தில் கொள்ளப்படும்.