நிதிச்சேவைத் துறையில் ஊழியர் திறன் மேம்பாடு

நிதிச்சேவைத் துறையில் ஊழியர் திறன் மேம்பாடு

1 mins read

நிதிச்சேவைத் துறை மாற்றங் களுக்கு மத்தியில் ஊழியரின் திறன் மேம்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை யுனைடெட் ஓவர்சீஸ் வங்கியில் (யுஓபி) நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய வாழ்க்கைத் தொழில் மாற்றும் திட்டம் எடுத்துக்காட்டுவதாக இரண்டாம் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார். தொழில்நுட்பமயத்தால் உள் ளூர் வங்கி ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் போகக்கூடிய அபாயத்தைக் குறைக்கவும், வங்கி கள் தத்தம் உருமாற்றத் திட்டங் களில் வெற்றி அடையவும் இது போன்ற திட்டங்கள் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். "நிதிச்சேவைத் துறை நமது பொருளியலில் தொடர்ந்து முக்கிய அங்கம் வகிக்கிறது. இத்துறையில் வேலைக்கு அமர்த்தப்படும் பட்டத் தொழிலர்கள், மேலாளர்கள், நிர் வாகிகள், தொழில்நுட்பர்களில் 80 விழுக்காட்டினர் சிங்கப்பூர் மக் கள்," என அவர் தெரிவித்தார்.