ரொக்கமற்ற முறையில் இயங்கும் முதல் தானியங்கி இயந்திரம்

ரொக்கமற்ற முறையில் இயங்கும் முதல் தானியங்கி இயந்திரம்

1 mins read
6a1929f4-1941-4be3-a266-4db4c7d7c230
-

புதிதாக திறக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் 'எஸ்பிஹெச் பஸ்' கடையில் நீண்ட வரிசைகளும் குறிப்பிட்ட அளவு சில்லறை காசுகள் வைத்துகொள்ள வேண்டிய அவசியமும் இருக்காது. ஜூரோங்கின் ஓல்ட் டோ டக் சாலையில் அமைந்துள்ள 'சினர்ஜி கேஸ் ஸ்டேஷன்' பெட்ரோல் நிலையத்தில் நேற்று திறக்கப்பட்ட அந்தக் கடையில், கடைக்காரர்கள் இயக்கும் முகவைகளுடன் தானியங்கி இயந்திரங்களும் உள்ளன. 'மாஸ்டர்கார்ட்' நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் 'எஸ்பிஹெச் பஸ்' கடை, சிங்கப்பூரிலேயே முதல்முறையாக 'QR' குறியீடு மூலம் இயங்கும் 'வெண்டிங்' இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இவை ரொக்கமற்ற பரிவர்த்தனையை கொண்டுள்ள நிலையில், பரிவர்த்தனை பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும் என்றும் பணத்தை ஆங்காங்கே தூக்கிச் செல்ல தேவையிருக்காது என்றும் 'மாஸ்டர்கார்டின்' வாடிக்கையாளர் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் திரு சாங் யுன்சொக் கூறியுள்ளார்.

உணவுப் பொருட்கள், பானங்கள், அழகுப் பராமரிப்பு பொருட்கள், மாத்திரைகள், சிறிய அன்பளிப்புகள் என்று பல வகையான பொருட்களை திறன்பேசியில் 'QR' குறியீடு மூலம் கட்டணம் செலுத்தி வாங்கலாம். நேற்று திறக்கப்பட்ட 'எஸ்பிஹெச் பஸ்' கடையில் புதிய தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் இணை தலைமை நிர்வாகி திரு ஆண்டனி டான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்