சமூகத்திற்கு உதவும் ஸ்ரீ நாராயண மிஷன்

சமூகத்திற்கு உதவும் ஸ்ரீ நாராயண மிஷன்

1 mins read
70496f7f-7f0b-4790-9ab4-82d9c61cdcfc
-

வில்சன் சைலஸ்

மூத்தோரைப் பராமரித்து பலவிதங் களில் அவர்களுக்குக் கை கொடுத்து வரும் ஸ்ரீ நாராயண மிஷன், இதர சமூக பணிகளின் மூலம் பலரின் வாழ்க்கை யையும் மெருகேற்றி வருகிறது. அடுத்த ஆண்டு தனது 70ஆம் நிறைவைக் கொண்டாடும் ஸ்ரீ நாராயண மிஷன், 'ஐபிசி' எனும் லாப நோக்கமில்லாத பொதுநல அமைப்பு என்ற தகுதியைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் செயல்படும் 2,000க்கும் அதிகமான அற நிறுவனங்களில் பத்து விழுக் காடு அறநிறுவனங்கள் மட்டுமே 'ஐபிசி' தகுதியைப் பெற்றுள்ளன என விளக்கிய ஸ்ரீ நாராயண மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ் தேவேந்திரன், "இந்த 'ஐபிசி' தகுதியைப் பெற்ற அறநிறுவனங்கள் தகுதி பெறும் நன்கொடையாளருக்கு வரி கழிவு ரசீதுகளை வழங்க முடியும்," என்றார். "இதனால், 'ஐபிசி' தகுதி பெற்ற அறநிறுவனங்கள் நன் கொடையாளர்கள் பலரை எளிதில் கவரக்கூடும் என்ற திரு தேவேந்திரன், இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை புதுப்பிக் கப்படும் 'ஐபிசி' தகுதியைத் தக்க வைத்துக்கொள்ள முறையான விதத்தில் அறநிறுவனத்தை நிர்வகிப்பது அவசியம்," என்றார்.

ஸ்ரீ நாராயண மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ் தேவேந்திரன். படம்: ஸ்ரீ நாராயண மிஷன்.