பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த மாதம் நிறுத்தப்பட வுள்ள எம்ஆர்டி சேவைகளுக்கு மாற்றாக பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்று பொதுப் போக்குவரத்து சேவை நிறுவனமான எஸ்எம்ஆர்டி நேற்று கூறியது. ரயில் போக்குவரத்து பாதிக் கப்படும் பகுதிகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நான்கு வழித் தடங்களில் பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன. ஊட்ரம் பார்க்-ஜூரோங் ஈஸ்ட், ஜூரோங் ஈஸ்ட்-ஜூ கூன், ஜூ கூன்- துவாஸ் லிங்க், ஜூரோங் ஈஸ்ட்-சுவா சூ காங் ஆகிய நான்கு வழித் தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் இருவழிகளில் பயணிக்கும். கிளமெண்ட்டியில் இருந்து பூன் லே நிலையம் வரை பயணம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணி, இரண்டு பேருந்து சேவைகளை எடுக்கவேண்டும். ஊட்ரம் பார்க்-ஜூரோங் ஈஸ்ட் லூப் மற்றும் ஜூராங் ஈஸ்ட்- ஜூ கூன் லூப் சேவை வசதியுடன் ஜூரோங் ஈஸ்ட் தற்காலிக சந்திப்பு நிலையத்தில் மாறிக் கொள்ளலாம்.
டிசம்பரில் ரயில் சேவை மூடல்; 4 புதிய பேருந்து சேவைகள்
1 mins read

