கிளார்க் கீ வட்டாரத்தில் உள்ள கடைத்தொகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஆடவர் ஒருவரை அறைந்த செர்ட்டிஸ் சிஸ்கோ பாதுகாவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பாதுகாவலர் கடைத்தொகுதியின் வாசலில் ஆடவர் ஒருவரை அறையும் காட்சியைக் காட்டும் காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆடவரை அறைவதற்கு முன் அவரிடம் அந்தப் பாதுகாவலர் மிகுந்த கோபத்துடன் பேசிக் கொண்டிருந்ததைக் காணொளி காட்டியது. அந்த ஆடவர் பாதுகாவலரை நெருங்கியபோது அவருக்கு அறை விழுந்தது. அறையின் காரணமாக அந்த ஆடவர் நிலை தடுமாறுவதைக் காணொளியில் பார்க்க முடிந்தது. கடந்த சனிக்கிழமை இரவு 7.20 மணிக்கு இது தொடர்பாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். விசாரணை நடத்தி வருவதாகவும் போலிசார் கூறினர்.
அறைந்த பாதுகாவலர் வேலை இழந்தார்
1 mins read

