காதலன் அருகில் இருந்தபோதே மானபங்கம் செய்யப்பட்ட பெண்

காதலன் அருகில் இருந்தபோதே மானபங்கம் செய்யப்பட்ட பெண்

1 mins read

ஹாலந்து வில்லேஜ்ஜில் ஓர் உணவகத்தில் பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டார். இந்தக் குற்றம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி அதிகாலை 1.15 மணி அளவில் நிகழ்ந்தது. அந்தப் பெண்ணின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவரது தோளின்மீது அவரது காதலன் கை வைத்திருந்தபோது அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டிருந்த 54 வயது அஃபண்டி முகம்மது நூர் அப்பெண்ணை மானபங்கம் செய்தார். சம்பவ இடத்துக்கு போலிசார் அழைக்கப்பட்டனர். அஃபண்டி கைது செய்யப்பட்டார். அவருக்கு நேற்று ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.