கதையை எடுத்துரைக்கும் கலைக் குவளைகள்

கதையை எடுத்துரைக்கும் கலைக் குவளைகள்

1 mins read
186258d3-a640-4674-bd2a-920f98dbbb74
-

சிங்கப்பூரின் பன்முகத்தன்மை உடைய இந்திய சமூகத்தின் கலாசார மரபுடைமையை எடுத்துக் கூறும் வண்ணம் லிட்டில் இந்தியா வில் அமைந்துள்ள இந்திய மரபுடைமை நிலையம் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளது. 'Symbols and Scripts - The Language of Craft' எனும் தலைப்புடைய இந்தக் கண்காட்சி அடுத்த மாதம் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதை முன்னிட்டு கண்காட்சி திறப்புக்கு முந்தைய ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் நேற்று விளக்கப்பட்டன.

இந்தக் கண்காட்சியில் கிட்டத் தட்ட 150 கைவினைப் பொருட்கள் இடம்பெறுகின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைவினைப் பொருட்களும் அவற்றில் அடங்கும். சிங்கப்பூரில் இத்தகைய பொருட்கள் காட்சிக்கு வைக்கப் படுவது இதுவே முதன்முறை.

தமது கைவண்ணத்தில் உருவான கலைக் குவளைகளுடன் திருமதி மாதவி சுப்பிரமணியன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்