ப. பாலசுப்பிரமணியம்
இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள அகுங் எரிமலையிலிருந்து வரும் புகை, சாம்பல் தொடர்ந்து அச்சுறுத்த, அங்கு சென்றிருக்கும் சுற்றுப்பயணிகளின் பயண ஏற்பாடுகளுக்கு இடையூறுகள் வந்த வண்ணம் உள்ளன. பாலியில் சிக்கிக்கொண்ட சுற் றுப்பயணிகள் நிலம், கடல் வழி பயணம் மேற்கொள்ள, தங்கும் விடுதிகள் உதவி வருகின்றன. அப்படி அவர்கள் தங்கும் விடுதி களில் கூடுதல் நாட்கள் இருக்க வேண்டும் என்றால் கட்டணக் கழிவும் அவர்களுக்கு வழங்கப்படு கிறது. உடனடியாகப் பாலியில் இருக் கும் தங்கும் விடுதிகளிலிருந்து புறப்பட விரும்பும் சுற்றுப் பயணி களுக்குப் போக்குவரத்து ஏற்பாடு களும் செய்யப்படுகின்றன.
அவர்கள் பயணப்படகு வழி ஜாவா தீவுக்குச் சென்று கிழக்கு ஜாவாவிலிருக்கும் சுரபாயா விமான நிலையத்திலிருந்து தங் கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப உதவி அளிக்கப்படுகிறது. இவ்வழியாகச் செல்வதற்குக் கூடுதலாகக் கிட்டத்தட்ட 12 மணி நேரம் வரை பிடிக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அதன் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பாலித் தீவில் சிக்கிக்கொண்ட சுற்றுப்பயணிகளில் தமிழ் முரசின் செய்தியாளர் 25 வயது சுதா ராம னும் ஒருவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாலித் தீவுக்கு நண்பர்களுடன் சுற்றுலா பயணம் மேற்கொள்ள சிங்கப்பூரிலிருந்து அவர் புறப் பட்டார். எரிமலையிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கலாசார மையமாக உபுட் பகுதியில் அவர் தங்கியிருந்தார்.
பாலி 'அகுங்' எரிமலை குமுறலால் பயணப் பாதிப்புகள் ஏற்பட்டாலும் குமாரி சரஸ்வதி தனது சுற்றுலா முடிவடையும் வரை தான் அங்கேயே இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். படம்: சரஸ்வதி

