சிங்கப்பூரர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு சுயநலப் போக்குடன் செயல்படும் போலியான வெளி நாட்டுச் செய்திகளை நம்பாமல் விழிப்புடன் சிங்கப்பூரர்கள் இருந்துவரவேண்டும் என்று முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாம் வலியுறுத்திக் கூறி யிருக்கிறார். சிங்கப்பூர் மக்களின் உணர்வு களைத் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்த முயலும் வெளிநாடு களின் அல்லது அமைப்புகளின் முயற்சிகளை சிங்கப்பூர் பொறுத் துக்கொள்ள முடியாது என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
டாக்டர் டான் நேற்று 800 அரச தந்திரிகள், மாணவர்களிடையே உரையாற்றினார். வெளியுறவு அமைச்சின் ஏற்பாட்டில் நடந்த வருடாந்திர 'எஸ் ராஜரத்தினம் விரிவுரை' தொடரில் இவ்வாண்டு உரை நிகழ்த்திய டாக்டர் டான், சிங்கப்பூர் மக்களை இன, சமய ரீதியில் பிளவுப்படுத்த புறசக்தி கள் முயலக்கூடும் என்று எச் சரித்தார். இதர நாடுகளில் சமயத் தீவிர வாதம் போன்ற வெளிநாட்டு ஆதிக்கங்கள் ஏற்கெனவே செயல் பட்டு வருவதை அவர் சுட்டினார்.
'எஸ் ராஜரத்தினம் விரிவுரையை' ஆற்றுகிறார் டாக்டர் டான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

