எம்ஆர்டி நிலையத்தில் வெண்ணிற மாவு தூவிய நபருக்கு அபராதம்

எம்ஆர்டி நிலையத்தில் வெண்ணிற மாவு தூவிய நபருக்கு அபராதம்

1 mins read

உட்லீ எம்ஆர்டி நிலையம் உட்பட ஓடும் பாதையை அடையாளம் காட்டுவதற்காக 69 வயது டே ஹோங் குவாங் என்பவர் வெண்ணிற மாவைத் தூவியிருந்தார். இதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன் காரணமாக பொது ஒழுங்குக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மீது நேற்று குற்றம்சாட்டப்பட்டது. 2017 ஏப்ரல் 18ஆம் தேதி பிற்பகலுக்கும் பிற்பகல் ஒரு மணிக்கும் இடையில் அப்பர் சிராங்கூன் ரோட்டில் உள்ள எம்ஆர்டி நிலையத்தைச் சுற்றி பல்வேறு இடங்களில் அவர் வெண்ணிற மாவைத் தூவியிருந்தார். இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் எம்ஆர்டி நிலையமும் மூன்று மணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டது. இதனால் 1,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்ட திரு டேவுக்கு ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.