சாங்கி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் போயிங் 777-200 ரக விமானத்தை புறப் பாட்டு வாயிலுக்கு அருகே இழுத் துச் சென்ற இழுவை வாகனத்தில் தீ மூண்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 4.00 மணி அளவில் வாகனம் தீப்பற்றி எரிந்த தாகவும் அப்போது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பேச்சாளர் ஒருவர் சொன்னார். விமானங்கள் நிறுத்தும் இடத் திலிருந்து எஸ்ஐஏ விமானம் புறப் படுவதற்காக முனையம் 3ல் உள்ள குறிப்பிட்ட இடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன.
ஏர்போர்ட் பொலிவார்ட் ரோட்டுக்கு மேலே உள்ள பாலம் வழியாக விமானம் இழுத்துச் செல்லப்பட்டபோது அந்த வாகனத் தில் தீ மூண்டது. உடனே அவசர சறுக்குப் பாதை வழியாக இழுவை வாகனத் தில் இருந்தவர்கள் வெளியேற்றப் பட்டனர். சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. விமான நிலைய அவசர சேவை பிரிவினர் தீயை அணைத்து நிலைமையை கட்டுக் குள் கொண்டு வந்தனர்.
ஸ்ஐஏ விமானத்தை இழுத்துச் செல்லும் இழுவை வாகனத்தில் தீ மூண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

