முஹம்மது ஃபைரோஸ்
நியூட்டன் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ராயலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர் களது பயணப் பெட்டிகளை ஹோட்டல் அறைகளுக்கு கொண்டு செல்லுதல், அவர்களின் தனிப்பட்ட தேவைகளை நிறை வேற்றுதல், விருந்தோம்பலுடன் சேவையாற்றுதல் உள்ளிட்ட பணி களை 'பெல் கேப்டன்' எனப்படும் சேவை மேற்பார்வையாளரான 43 வயது திரு நடராஜா லோகநாதன் செய்யவேண்டும். இருப்பினும் கடமைக்கு அப்பாற்பட்டு இவர் புரிந்த ஒரு நற்செயலால் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த உடற்குறையுள்ள சிறுவன் காப்பாற்றப்பட்டான். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது திரு நடராஜா ஹோட்டல் வளாகத்தினுள் வழக்கமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த நீச்சல் குளத்தில் அச்சிறுவன் தத் தளித்துக் கொண்டிருக்கவே, அவனது தாயார் உதவிக்காக கூக்குரல் எழுப்பினார். அந்தத் தருணத்தில் குளத்தில் யாருமே இல்லை.
கனிவன்பு சேவையில் தங்க விருது பெற்ற நடராஜா லோக நாதன்(இடம்), சன்ஜே தேவேந்திர பிள்ளை. படம்: சாவ் பாவ்

