'சிங்கப்பூரின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவேன்'

'சிங்கப்பூரின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவேன்'

2 mins read
8b8fb9a6-17cb-42b7-ace0-a2a2a3ee9b8b
-

முஹம்மது ஃபைரோஸ்

ஆரம்பகாலத்தில் மீன்பிடிக் கிராம மாக இருந்த சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டில் முதலாம் உலக நாடாக உருவெடுத்துள்ளது தமக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள் ளதாக தெரிவித்துள்ளார் இங்கு முதல்முறையாக வந்திருக்கும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த விவ சாயி திரு எம். ராஜேந்திரா, 43. ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரமாக அமராவதியை உரு வாக்க சிங்கப்பூரும் ஆந்திரப் பிரதேச அரசாங்கமும் மேற்கொண்டு வரும் கூட்டு முயற்சியின் ஒரு பகு தியாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த 34 விவசாயிகள் சிங்கப்பூருக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண் டுள்ளனர்.

அவர்களில் ஒருவரான திரு ராஜேந்திரா, ஆந்திரப் பிரதேசத் தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிங்கப்பூரின் உள்கட்ட மைப்பு, பசுமை, நகர்ப்புற ஆளுமை, கல்வி, போக்குவரத்துச் சேவை போன்ற அம்சங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள் ளதைச் சுட்டிய அவர், நீண்டகாலத் தில் அமராவதி நகரமும் இந்த நிலையை எட்டவேண்டும் என்பது தமது கனவு என்று சொன்னார். "எனது உறவினர்களுள் சிலர் சிங்கப்பூரில் வசிக்கின்றனர். இந்தச் சிறிய நாட்டைப் பற்றி அவர்கள் பெரிதாகக் கூறியிருந் தனர். நேரில் வந்து பார்க்கும்போது இந்நாட்டின் அபார வளர்ச்சி பாராட்டுதலுக்குரியது," என்றார் அவர்.

'அவர் தெம்பனிஸ் ஹப்' கட்டடத்தின் 5வது மாடியில் அமைந்திருக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலான சமூகத் தோட்டத்தில் உள்ள 'கோஸ்டஸ்' செடி பற்றி ஆந்திரப் பிரதேச விவசாயிகளுக்கு விளக்கமளிக்கிறார் அதன் நிர்வாகியான திரு ரிச்சர்ட் குவோக். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்