பயணிகளுக்கு காயம் விளைவித்த பேருந்து ஓட்டுநருக்கு $2,500 அபராதம்

பயணிகளுக்கு காயம் விளைவித்த பேருந்து ஓட்டுநருக்கு $2,500 அபராதம்

1 mins read
3ce2f884-a6d3-426f-843a-4940fc4fed0e
-

தான் ஓட்டிய பேருந்தில் உள்ள பயணிகளுக்கு காயம் விளைவித்த எஸ்எம்ஆர்டி பேருந்து ஓட்டுநரான 47 வயது திரு சுப்பிரமணியம் கண்டியப் பனுக்கு (படம்) நேற்று $2,500 அபராதமும் அனைத்து வகை வாகனங்களை ஓட்ட ஈராண்டு தடையும் தண்டனையாக விதிக் கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி பிற்பகல் 1.40 மணிக்கு 858 சேவை பேருந்தை யீ‌ஷூன் அவென்யூ 2ஐ நோக்கிய லென்டோர் அவென்யூவில் ஓட்டிய மலேசியரான சுப்பிரமணியம், கவனக் குறைவால் மற்றொரு எஸ்எம்ஆர்டி 854 சேவை பேருந்தின் மீது மோதினார். அதனால் 22 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட 14 பயணிகள் காயமுற்று கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எட்டு பேர் சுப்பிரமணியத்தின் பேருந்திலும் அறுவர் மற்றொரு பேருந்திலும் இருந்தவர்கள். அவர்களில் இருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்ட தால் அவர்கள் மருத்துவமனையில் தங்க நேரிட்டது. சுப்பிரமணியம் தனது குற்றத்தை இம்மாதம் 8ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.