பிடோக் ரெசர்வோர் ரோடு, காக்கி புக்கிட் அவென்யூ 1 சந்திப்பில் நேற்றுக் காலை மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் திரு அட்டான் அமாட், ஈரடுக்கு பேருந்து ஒன்றுடன் மோதியதில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி பின்னர் சாங்கி பொது மருத்துவமனையில் மரணமுற்றார் (படம்) என்று தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தங்க ளுக்கு காலை 10.28 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறிய போலிஸ் பேச்சாளர், "சுயநினைவற்ற நிலையில் 52 வயது ஆடவர் ஒருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்," என்று கூறினார். காக்கி புக்கிட்டை நோக்கிய பிடோக் ரெசர்வோர் ரோட்டில் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது என்றும் மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் போக்குவரத்து விளக்கைக் கவ னிக்காமல் சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து அவரை மோதியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. திரு அட்டான் எஸ்எம்ஆர்டி பணிமனையில் துப்புரவா ளராகப் பணியாற்றினார் என அவரது உறவினர்கள் கூறினர்.
பேருந்தில் மோதிய மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் மருத்துவமனையில் மாண்டார்
1 mins read
-

