வாகன ஓட்டுநர் பயிற்சிக்காக வழங்கப்படும் தற்காலிக உரிமம் (பிடிஎல்) இன்று முதல் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்துடன் வழங்கப்படும். முன்பு இருந்த ஆறு மாத கால அவகாசத்திலிருந்து நீட்டிக்கப்படும் இந்த உரிமத்தின் காலக்கெடு, புதிதாக விண்ணப்பிக்கப்படும் உரிமத்திற்கும் ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமங்கள் புதுப்பிக்கப்படும்போதும் பொருந்தும். இந்தத் தகவலை சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று அறிவித்துள்ளது. அதோடு, முன்பு வழங்கப்பட்ட தாள் வடிவிலான தற்காலிக உரிமத்திற்கு பதிலாக இனி மின்னணு வடிவில் அவை வழங்கப்படும். மேலும், இந்த உரிமத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது 'சிங்பாஸ்' மறைச்சொல்லைப் பயன்படுத்தி போலிஸ் படையின் இணையத் தளத்திலோ திறன்பேசி செயலியிலோ விண்ணப்பம் செய்யலாம்.
தற்காலிக ஓட்டுநர் உரிமத்தின் கால அவகாசம் நீட்டிப்பு
1 mins read

