சொத்துச் சந்தையில் அண்மைக் காலமாக நிலவிவரும் மேம்பாடு களால் பேரார்வம் கொள்வதோடு வளர்ச்சியை சற்று எச்சரிக்கையு டன் கண்காணிக்க வேண்டும் என்று நேற்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது. ஒட்டு மொத்த மேம்பாட்டுத் திட்டம், உயர்ந்து வரும் நில விலைகள் ஆகியவை சந்தையின் நிலைத் தன்மைக்கு அபாயமாக அமைய லாம் என்றும் ஆணையம் குறிப் பிட்டது. விநியோகம்=தேவை குறி யீட்டை சற்று நீண்டகால கண் ணோட்டத்தில் ஆய்வு செய்து எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என்று சந்தையில் சம் பந்தப்பட்டவர்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
2017 நிதி நிலைத்தன்மை ஆய்வில் இந்தத் தகவலை ஆணையம் வெளியிட் டது. ஒட்டுமொத்த மேம்பாட்டுத் திட்டம், அரசாங்க நில விற்பனை மூலம் கிடைக்கும் இடங்களால் மேலும் 20,000 புதிய வீடுகள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சந்தையில் விற்பனைக்கு வரும். விற்பனைக்கு உள்ள வீடுகளின் எண்ணிக்கையில் இது இரண்டு மடங்கு. மூன்றாம் காலாண்டில் திட்டத்துறை ஒப்புதலுடன் 16,031 வீடுகள் விற்பனைக்கு உள்ளன. அதனால், அதிகமான வீடுகள் விற்பனைக்கு உள்ள நிலையில் அதற்கு ஈடுகட்டக்கூடிய அள வில் அதற்கான தேவை இருக் குமா என்ற அக்கறையில் ஆணையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

