சேவைத் தடை குறித்து பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும்

சேவைத் தடை குறித்து பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும்

1 mins read

10 நிமிடத்திற்கு மேல் ரயில் சேவைத் தடை ஏற்பட்டால் ரயில்களிலும் ரயில் நிலையங் களிலும் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அறிவிப்பு செய்யவேண்டும் என்று ரயில் நிறுவனங்களுக்கு நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்று உத்தர விட்டுள்ளது. அண்மையில் ரயில் சேவைகள் தடை ஏற்பட்டபோது பயணிகள் பலருக்கு அது பற்றிய முறையான தகவல் கிடைக்கவில்லை என்றும் சில சேவை தடைகளின்போது எந்தவித அறிவிப்பும் செய்யப்பட வில்லை என்றும் பலர் குறை கூறியிருந்தனர். பொதுமக்களின் இந்தக் கருத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் ஆணையத்திடம் முன்வைத்தது.

அந்தக் கருத்துகளை தாங்கள் அறிந்துள்ளதாகவும் தக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையப் பேச்சாளர் கூறியிருந்தார். ரயில்களிலும் ரயில் நிலையங்க ளிலும் அறிவிப்பு செய்வது மட்டு மல்லாமல் தாமதம் ஏற்படும் தரு ணத்தில் மற்ற சில வழிகளிலும் ரயில் சேவை நிறுவனங்கள் தக வல் தெரிவிக்கவேண்டும் என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறி னார். பிரதான ஊடகங்களிலும் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் தகவல்கள் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க் கப்படுவதாகவும் அவர் தெரிவித் தார்.