162 சந்தேக நபர்கள் கைது

162 சந்தேக நபர்கள் கைது

1 mins read

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் 2017 நவம்பர் 27 முதல் டிசம்பர் 1ஆம் தேதி காலை நேரம்வரை மேற்கொண்ட நாடளாவிய நடவடிக்கைகளில் மொத்தம் 162 பேர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள். அவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. மொத்தம் 158 கிராம் ஐஸ், 65 கிராம் ஹெராயின், 14 கிராம் கஞ்சா, 1.2 கிலோ செயற்கை கஞ்சா, 187 எரிமீன்=5 மாத்திரை கள், 13 எக்ஸ்டசி மாத்திரைகள், 13 எல்எஸ்டி முத்திரைகள், 4 யாபா மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சிங்கப்பூர் போலிஸ் படை இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து உதவியது. அங் மோ கியோ, பிடோக் ரெசர்வோர், புவாங்கோக், கேலாங், ஹவ்காங், ஜூரோங், பொத்தோங் பாசிர், பொங்கோல், சிராங்கூன், தெம்பனிஸ் ஆகிய வட்டாரங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.2017-12-02 06:00:00 +0800