விபத்து: வாகனத்தில் சிக்கிய ஆடவர்

விபத்து: வாகனத்தில் சிக்கிய ஆடவர்

1 mins read

சிலேத்தார் விரைவுச்சாலையில், லெண்டோர் அவென்யூ புறவழிக்கு அருகே நேற்று முற்பகல் சுமார் 10 மணிக்கு ஒரு குட்டி பேருந்தும் லாரியும் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது. அதில் 57 வயது ஆடவர் ஒருவர் வாகனத்தில் தனது இருக்கையில் மாட்டிக்கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவரை மீட்டது. விபத்தில் சிக்கிய குட்டி பேருந்தை அந்த ஆடவர் ஓட்டி வந்தார் என்று தெரிகிறது. அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். விபத்து காரணமாக அப்பர் தாம்சன் ரோடு புறவழி வரையில் வாகனத் தேக்கம் ஏற்பட்டது.