சிங்கப்பூர் ஆயுதப் படைகளில் எதிர்காலத்தில் மனிதவளம் குறை யும் என்பதால் ஒவ்வொரு படை வீரரும் தலைசிறந்தவராகத் திகழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பரந்த அடிப்படையிலான ஒரு புதிய உன்னத நிலையம் திறக்கப்பட்டு இருக்கிறது. கச்சிதமான உடலுறுதி ஏற்பாடு கள் முதல் படைவீரர் போர் சாதன ஆற்றல்கள் வரை பலவற்றையும் கொண்டிருக்கும் அந்தப் புதிய உன்னத நிலையம் பலதுறை வல் லுநர்களைத் திறமையாகப் பயன் படுத்திக்கொள்ளும். விளையாட்டுத்துறை அறி வியல், மனோவியல், சத்துணவு போன்ற பலதுறைகளைச் சேர்ந்த வல்லுநர்களையும் பயன்படுத்தி படைவீரர்களின் செயல்திறனை மேம்படுத்த அந்த நிலையம் மிகவும் பாடுபடும்.
போர்க்களத்தில் படைவீரர்கள் மிகவும் ஆற்றலுடன் செயல்படவும் அவர்களைப் புதிய நிலையம் தயார்படுத்தும். 'படைவீரர் உன்னத செயல் திறன் நிலையம்' என்ற அந்தப் புதிய நிலையம் படைவீரர்கள் அறிவார்ந்த முறையில் பயிற்சி பெறவும் காயங்களிலிருந்து வேக மாக குணமடையவும் மனவலிமை யுடன் திகழவும் திறம்பட வகை செய்யும். அதோடு, படைவீரர்கள் முழு மையான ஆற்றலுடன் கூடியவர் களாக உருவாவதற்குப் புதிய நிலையம் உதவும். புதிய நிலையத்தின் தொடக்க நிகழ்ச்சியை இரண்டாவது தற் காப்பு அமைச்சர் ஓங் யி காங் நடத்திவைத்தார்.

