அமைச்சு: பணிப்பெண்கள் குறித்த ஆய்வு தவறான கண்ணோட்டத்தில் உள்ளது

அமைச்சு: பணிப்பெண்கள் குறித்த ஆய்வு தவறான கண்ணோட்டத்தில் உள்ளது

1 mins read

சிங்கப்பூரில் பணி புரியும் வெளி நாட்டு இல்லப் பணிப் பெண்களில் பெரும்பாலானோர் அவர்களது முதலாளிகளால் மிதமிஞ்சிய வேலைக்கு உட்படுத்தப்படுகிறார் கள் என்றும் ஐந்தில் ஒரு பணிப்பெண் கட்டாயப்படுத்தி வேலைக்கு உட்படுத்தப்படுகிறார் என்றும் தெரிவித்த ஓர் ஆய்வு தவறான கருத்தை வெளிப்படுத்தி உள்ளது என மனிதவள அமைச்சு சாடியுள்ளது. ஆய்வு குறித்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சு, அந்த ஆய்வு வெளி நாட்டு இல்லப் பணிப்பெண்கள் சிங்கப்பூரில் வேலைக்கு அமர்த்தப் படுவது குறித்த தவறான கண்ணோட்டத்தை வெளிப்படுத் தியுள்ளது என்று தெரிவித்தது.

ய்வாளர்கள் மிதமிஞ்சி வேலை வாங்கியதாக நம்ப முடியாத, மிக எளிமையான விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அமைச்சு கூறியது. கிட்டத்தட்ட 151 பக்கங்களைக் கொண்ட அந்த ஆய்வுக் கட்டுரை "ரிசர்ச் அக்ரோஸ் பார்டர்ஸ்' எனும் அமைப்பால் செய்யப்பட்டது. அஞ்சா வெஸல்ஸ், மாடலின் ஓங், தவினியா டேனியல் ஆகி யோர் மேற்கொண்ட இந்த ஆய்வு 'ரிசர்ச்கேட்' எனும் ஆய்வாளர் களுக்கான சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.