கழிவுப் பொருட்களை முழுமையாக ஒழித்து தாக்குப்பிடிக்கக் கூடிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வண்ணம் நேற்று தோ பாயோ செண்ட்ரலில் மறுபயனீட்டுப் பொருட்களுக்கான சந்தை நடைபெற்றது. பயன்படுத்திய பொருட்களை வீசிவிடாமல் அவற்றை வேறு விதமாக மறுபயனீடு செய்ய சிங்கப்பூரர்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். மூன்றாம் ஆண்டாக நடைபெறும் இந்த சந்தையில் இதுவரை காணாத அளவாக முப்பது கடைகள் இருந்தன. அவற்றில் பல, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு 'புது வாழ்வு' அளித்திருந்தன. 'அப் மார்கெட்' என அழைக்கப்படும் இச்சந்தைக்கு பிரதமர் அலுவலக அமைச்சரும் உள்துறை, மனிதவள இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்திராகக் கலந்துகொண்டார்.
பிரதமர் அலுவலக அமைச்சர் ஜோசஃபின் டியோவும் (இடது) மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் திருவாட்டி டென்னிஸ் புவாவும் பிளாஸ்டிக் புட்டிகளால் செய்யப்பட்ட சட்டிகளில் நட்ட செடிகளை மக்களின் பார்வைக்கு வைக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைஸ்

