இன்றைய புதிய சவால்களைச் சமாளிக்க அரசாங்கங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்பவை யாகவும் மாற்றங்களை அமல்படுத் தக்கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்றும் மாறிக்கொண்டே இருக்கும் சூழலுக்கு ஏற்ப துரித மாக தங்களை மாற்றிக்கொள் ளக்கூடிய தன்மையைக் கொண் டிருக்க வேண்டும் என்றும் சுற்றுப் புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார். சிங்கப்பூரையும் மக்கள் செயல் கட்சியையும் (மசெக) பிரதிநிதித்து சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் உச்சநிலை கலந் துரையாடலில் அவர் உரை ஆற்றினார்.
ஆரம்ப காலத்தில் சிங்கப்பூர் தொழிற்துறையிலும் பொதுக் கட்டமைப்பு மேம்பாட்டிலும் கவனம் செலுத்தியது என்றும் மக்களுக்கு முன்னால் நின்று அவர்களை வழிநடத்தி, முடிவு களைத் தானே எடுத்தது என்றும் அமைச்சர் சுட்டினார். ஆனால் 1990களில் மக்களுடன் கலந்துரையாடி அவர்களது கருத் துகளைக் கேட்டறிந்து முடி வெடுக்கும் பாணியைக் கடைப் பிடித்தது என்றார் அவர். இது நாளடைவில் அரசும் மக்களும் ஒன்றாக இணைந்து முடிவுகளை எடுக்கும் கூட்டுறவு பாணி அரசாக மாறியுள்ளது என்றும் அவர் விவரித்தார்.

