சாங்கி விமான நிலையம் வழி யாகப் பயணம் செய்யும் பயணி கள், அங்கு செயல்படும் விமான நிறுவனங்கள் ஆகியவை செலுத்த வேண்டிய கட்டணம் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக் கக்கூடும் என்று தெரிகிறது. விமான நிலையம் முனையம் 5ஐ கட்டுவதற்கு ஆகும் செல வைச் சமாளிக்க உதவும் நோக்கத் தில் இந்தக் கட்டண உயர்வு இடம்பெறுவதாகத் தெரிகிறது என்று சண்டே டைம்ஸ் குறிப் பிட்டது.
விமான நிலையம் முனையம் 5ஐ 2030ல் கட்டி முடிக்க திட்ட மிடப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு 'சாங்கி கிழக்குத் திட்டம்' என்று பெயர். இதற்குக் கோடானுகோடி வெள்ளி தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. அந்தப் புதிய எதிர்கால முனையம் ஆண்டு ஒன்றுக்கு 70 மில்லியன் பயணிகளைக் கையாளும் திற னுடன் இருக்கும். முனையம் 5யும் சேர்த்துப் பார்த்தால் சாங்கி விமான நிலை யத்தின் மொத்த பரப்பு இரண்டு மடங்கிற்கும் அதிகமாகி 2,000 ஹெக்டருக்கும் கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது சாங்கி விமான நிலையம் ஆண்டு ஒன்றுக்கு 150 மில்லியன் பயணிகளைச் சமாளிக் கும் ஆற்றலுடன் திகழும். ---

