அடுத்த பொதுத்தேர்தல்: மசெக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்

அடுத்த பொதுத்தேர்தல்: மசெக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்

1 mins read
941b393a-6dca-41a2-992f-9c9c8a2a1e1d
-

மக்கள் செயல் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்புள்ள சுமார் 200 வேட்பாளர்களை அடை யாளம் கண்டிருக்கிறது. அவர்களில் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தொழில்துறை உறவு அதி காரியாக பணியாற்றும் ஜெகதீஸ்வரன் ராஜு, 30, ஒருவர் என்பது தெரியவந்திருப்பதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. மசெக புதிய வேட்பாளர்கள் பட்டியலில் தனியார் துறை, பொதுத் துறையைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். கடந்த 2015 பொதுத் தேர்தலின்போது பரிசீலிக்கப்பட்ட சிலரும் அவர்களில் இருக்கிறார்கள்.

2021 பொதுத் தேர்தலில் மசெக சார்பில் போட்டியிடக் கூடியவர்களில் ஒருவரான ஜெகதீஸ்வரன் ராஜு. படம்: பிரைட்மைண்ட்ஸ்