காலக்கிரம முறைப்படி உடற்பயிற்சி செய்யுங்கள். உடல்நல பரி சோதனைக்கு முன்னதாகவே சென்று கோளாறுகள் ஏதாவது உண்டா என்பதை முன்கூட்டியே கண்டறியுங்கள். சத்துணவைச் சாப்பிடுகிறீர்களா என்பதைக் கண்காணித்து வாருங்கள். இத்தகைய செயல்களின் மூலம் நலமான வாழ்க்கைப் பாணியை நோக்கி ஒரு சிறு முயற்சியை மேற்கொள்ளுங்கள். இதுவே ஹோங் கா நார்த் சமூக மன்றத்தில் நேற்று நடந்த உடற்பயிற்சி மற்றும் சமையல் விளக்கக் காட்சியின் கருப்பொரு ளாக இருந்தது.
அதில் சுகாதார மற்றும் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் கலந்துகொண்டார். அவ ருடன் குடியிருப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். "எதுவுமே செய்யாமல் இருப் பதைவிட எதையாவது செய்து உடல்நலத்தைப் பேணிக் காக்கும் வாழ்க்கை பாணியை கைகொள்ள நாம் முயற்சி மேற்கொள்ளவேண் டும் என்பது நினைவுகூரத்தக்க முக்கியமான ஒன்று," என்று அமைச்சர் குறிப்பிட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் '2018 உடல்நல நாட்காட்டி' வெளியிடப் பட்டது. அது மாதர்களின் வாழ் வில் எல்லா கட்டங்களுக்கும் ஏற்ற உடற்பயிற்சிகளை விவரிக் கிறது. அவற்றில் சில பயிற்சிகள் நேற்றைய நிகழ்ச்சியில் செய்து காட்டப்பட்டன.
ஹோங் கா நார்த் சமூக மன்றத்தில் நேற்று நடந்த உடற்பயிற்சி விளக்கக் காட்சியில் அமைச்சர் டாக்டர் ஏமி கோர் குடியிருப் பாளர்களுடன் கலந்து கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

