2018 வரவுசெலவுத் திட்டம்: பொதுமக்கள் கருத்து, யோசனைகளைத் தெரிவிக்கலாம்

2018 வரவுசெலவுத் திட்டம்: பொதுமக்கள் கருத்து, யோசனைகளைத் தெரிவிக்கலாம்

1 mins read

சிங்கப்பூரர்கள், 2018 வரவுசெலவுத் திட்டம் பற்றி தங்கள் கருத்துகளை, யோசனைகளை, தகவல்களை இன்று முதல் தெரியப்படுத்தலாம். தனிப்பட்டவர்கள், குடும்பத் தினர், நிறுவனங்களிடமிருந்து கருத்துகளையும் யோசனைகளை யும் திரட்டலாம் என்று தான் நம்பு வதாக நேற்று நிதி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சிங்கப்பூர் நிறுவனங்கள் எப்படி போட்டித்திறனுடன் திகழ முடியும், புதிய வாய்ப்புகளை மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும், ஒருவர் மற்றொருவருக்கு எப்படி உதவிசெய்ய முடியும், ஆதரவாகத் திகழ முடியும் என்பவை பற்றியும் எதிர்கால தேவைகளை நிறைவேற்ற நாம் எப்படி திட்டமிட முடியும் என்பது குறித்தும் பொது மக்களும் நிறுவனங்களும் கருத்து களை, யோசனைகளை முன்வைப் பார்கள் என்று நிதி அமைச்சு நம்புகிறது. பல்வேறு வழிகள் மூலம் பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம். இவற்றில் அரசாங்க கருத்தறியும் பிரிவான ரீச் அமைப்பின் பட்ஜெட் 2018க்கு முந்தைய இணையத் தளமும் ஒன்றாகும்.