$37.5 மி. கெப்பல்கிளப் போலி உறுப்பினர் அட்டை மோசடி; பின்னணியில் 70 வயது மாது

$37.5 மி. கெப்பல்கிளப் போலி உறுப்பினர் அட்டை மோசடி; பின்னணியில் 70 வயது மாது

1 mins read

கெப்பல் கிளப் மனமகிழ் மன்றத் தில் போலியாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட மோசடியில் மூளை யாகச் செயல்பட்டதாக நம்பப்படும் 70 வயது மாது நேற்று நீதிமன்றத் தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சீதோ ஐரின் என்றும் அழைக் கப்படும் சீத்தோ உய் லின், வயது 70, கெப்பல் கிளப் போலி உறுப் பினர் அட்டைகள் மூலம் பலரை ஏமாற்றி 37.5 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. மூவாயிரத்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அவர் 60 ஏமாற்றுக் குற்றச்சாட்டு களை ஒப்புக்கொண்டார். கெப்பல் கிளப்பில் 48 ஆண்டு களாக பணியாற்றி வந்த சீத்தோ குற்றச்செயல்கள் நடந்தபோது தலைமை நிர்வாகியின் தனிப்பட்ட உதவியாளராகவும் பதவி உயர்வு பெற்றார். அப்போது உறுப்பினர் மாற்றம், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, உறுப்பினர் தகுதியிலிருந்து விலகுவது, உறுப்பினர்களுக்கு பதில் அளிப்பது போன்ற உறுப் பினர் தொடர்பான பணிகளுக்கு பொது நிர்வாகி பொறுப்பு வகித் தார். இந்நிலையில் அவரது கீழ் பணியாற்றிய சீத்தோ 2004ஆம் ஆண்டிலிருந்து கெப்பல் கிளப் பின் போலி உறுப்பினர் அட்டை களை விற்கத் தொடங்கினார்.