அமெரிக்காவில் உள்ள தமது கட்சிக்காரர் லீ ஷெங்வூ விடம் தலைமை சட்ட அதிகாரி அலுவலகம் வழியாக நீதிமன்ற ஆவணங்களை சமர்பிக்க நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று லீ ஷெங்வூவின் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் முன்னதாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் அமெரிக்காவில் உள்ள லீ ஷெங்வூவிடம் ஆவணங்களை சமர்பித் துள்ளது. இந்நிலையில் நேற்று வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது திரு லீ இம்மாதம் 22ஆம் தேதிக்கு முன்பு தனது விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லீ ஷெங்வூ மீதான வழக்கு; ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
1 mins read

