இரண்டு மணி நேரத்திற்குள் தனித்தனியான இரண்டு சம் பவங்களில் இரு பெண்களை மானபங்கப்படுத்திய ஆஸ்தி ரேலிய ஆடவரான வேட் ஜேம்ஸ் புரிட்ஜ், 34, என்பவருக்கு 11 மாதச் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட்டது. புரிட்ஜ் மேல்முறையீடு செய் திருக்கிறார். அவருக்கு $40,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருக் கிறது. ஆறு நாள் நடந்த விசா ரணைக்குப் பிறகு அக்டோபர் 25ஆம் தேதி புரிட்ஜ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பந்தயக் குதிரை தொழிலில் ஈடுபடும் சொந்த நிறுவனம் ஒன்றின் இயக்குநராக இருக்கும் புரிட்ஜ், மானபங்கம் தொடர்பான இரு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட் டது. 2015 அக்டோபர் 8ஆம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு கேண்டோன் ஸ்திரீட்டில் இருக்கும் முகாம்போ பாரில் 46 வயது மாதை அந்த ஆடவர் மானபங்கப்படுத்தி னார் என்று விசாரணையில் தெரி விக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட வேட் ஜேம்ஸ் புரிட்ஜ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

