சிங்கப்பூரில் பலதரப்பட்ட துறை களில் நவீன ஆய்வுகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத் திற்கும் கீசைட் டெக்னாலஜிஸ் என்ற அமெரிக்காவின் நிறுவனத் திற்கும் இடையில் நேற்று ஓர் உடன்பாடு கையெழுத்தானது. ஆய்வுப் பங்காளித்துவ உற வைத் தொடங்குவதும் எம்டிஎல் என்ற ஆய்வுக்கூடத்தைத் திறப்ப தும் அந்தப் புரிந்துணர்வு குறிப்பின் இரண்டு முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. கீசைட் நிறுவனம் அந்த ஆய்வுக்கூடத்துக்கு $8 மில்லி யன் மதிப்புள்ள சாதனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நவீன உற்பத்தித்துறை, கணினித் தகவல் பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஆய்வுகளை நடத்து வதற்காக $2 மில்லியன் மானியத் தையும் அந்த நிறுவனம் வழங்கு கிறது. சிங்கப்பூர் தொழில்நுட்ப வடி வமைப்புப் பல்கலைக்கழக வரலாற் றில் கீசைட் நிறுவனம் செய்துள்ள இந்த $10 மில்லியன் முதலீடுதான் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு நிறுவனம் செய்திருக்கும் ஆக அதிக முதலீடாக இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழக வளா கத்தில் நேற்று நடந்த உடன்பாட்டு கையெழுத்து நிகழ்ச்சியையடுத்து வர்த்தக தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரன் புதிய ஆய்வுக்கூடத்தைத் தொடங்கி வைத்தார்.

