அரசு நீதிமன்றத்தில் நேற்று முதல் முறையாக பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சி நேற்று நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றது. அரசு நீதிமன்ற வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் எப்படி பதில் நடவடிக்கை எடுப்பது என்பதில் சிங்கப்பூர் போலிஸ் படைக் கும் அரசு நீதிமன்றத்துக்கும் இடையி லான ஒருங்கிணைப்பைச் சோதிப்பதற் காக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது என்று சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கை யில் கூறியது.
துப்பாக்கி ஏந்திய இருவர் அரசு நீதிமன்றத்துக்குள் நுழைந்து அங் குள்ளவர்களைச் சுடுவது போன்ற பாவனைப் பயிற்சி அமைந்திருந்தது. பயிற்சியில், அங்குள்ள துணை போலிஸ் அதிகாரிகளும் அரசு நீதி மன்ற ஊழியர்களும் போலிஸ் படையி னர் வரும்வரை நிலைமையைக் கட் டுக்குள் வைத்திருந்தனர். அவசரகால பதில் நடவடிக்கை குழு அதிகாரிகளும் புக்கிட் மேரா ஈஸ்ட் அக்கம் பக்க போலிஸ் மையத் தின் அதிகாரிகளும் சில நிமிடங்க ளுக்குள் அங்கு வந்து சேர்ந்தனர்.
பின்னர் அங்குள்ள துணை போலிஸ் அதிகாரிகள், அரசு நீதி மன்ற ஊழியர்கள் ஆகியோரின் உத வியுடன் துப்பாக்கிக்காரர்கள் இருக் கும் இடத்தைக் கண்டறிந்து அவர் களைச் சுட்டு வீழ்த்தினர்.

