மிதிவண்டி பகிர்வு நிறுவனமான 'ஓபைக்', அதன் செயலியின் பாதுகாப்பை மறுஆய்வு செய் கிறது. மொத்தம் 14 நாடுகளிலுள்ள ஓபைக் பயன்பாட்டாளர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து நிறு வனம் இந்நடவடிக்கையை மேற் கொண்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் பெயர், மிதிவண்டி ஓட்டப்படும் இடம் போன்ற மறைக்குறியீடற்ற விவ ரங்கள் இணையத்தில் கிடைப்ப தாக 'பிஆர்24' எனும் பவேரிய செய்தி நிறுவனம் சென்ற வாரம் செய்தி வெளியிட்டது.
இதுபற்றி இரு வாரங்களுக்கு முன் தெரிய வந்ததாகவும், உடன டியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிங்கப்பூரில் உள்ள ஓபைக் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார். விவரக்கசிவால் ஒரு சிலரே பாதிக்கப்பட்டதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார். "நாங்கள் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்பதால், பயன்பாட் டாளர்களின் விவரமும் பாது காப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியம்," என்றார் அவர். கடன் அட்டை விவரங்களும் மறைச்சொற்களும் செயலியில் பத்திரப்படுத்தி வைக்கப்படுவ தில்லை என்பதால் அவ்விவரங் கள் கசியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

