ஆளில்லா வானூர்தியைப் பாதுகாப் பான புதிய முறையில் பறக்கவிடு வதற்கு நம்பகமான அதிவேக இணையக் கட்டமைப்பைப் பயன் படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது. நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக் கழகமும் எம்1 தொலைத் தொடர்பு நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை முதன்முதலாக மேற்கொள்ளவிருக்கின்றன. ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிடுவதற்கு வழக்கமாகப் 'வயர்லெஸ்' என்னும் கம்பியில்லா இணைப்புக் கட்டமைப்பு பயன்படுத்தப் படுகிறது. இப்போது அதற்குப் பதிலாக 'ஹெட்நெட்' என்னும் புதிய அதிவேக இணை யக் கட்டமைப்பைப் பயன் படுத்துவ தன் சாத்தியம் குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கான ஆய்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஆய்வு மூன்றாண்டுகளுக்குள் முடிவுறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த ஆய்வுக்குப் பின் இதுபோன்ற அதிவேக இணையக் கட்டமைப்பின் உதவியால் ஆளில்லா வானூர்திகளின் போக்குவரத்து மேலாண்மை முறையை உருவாக்க முடியும். அத்துடன் ஒரே நேரத்தில் பல ஆளில்லா வானூர்திக் கருவிகளை ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட வழிகளில் இயக்க முடியும். தற்போது 4ஜி என்னும் அதிவேக இணையக் கட்டமைப்பு கைத்தொலைபேசிகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. 4.5ஜி என்னும் அடுத்த கட்ட அதிவேக இணைப்பின் வழியாக ஆளில்லா வானூர்திகள் ஒன்றுக் கொன்று அதிக இடைவெளியில் கூட தடங்கலற்ற நிலையில் நம்பக மான தரவுத் தொடர்புகளைக் கொண்டிருக்க இயலும். இந்த ஆய்வு நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் வானூர்தி போக்குவரத்து மேலாண்மை ஆய்வுக் கழகத்தின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப் படவுள்ளது.

