சிங்கப்பூரின் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்புப் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் ஐந்து பேர், சக்கர நாற்காலியில் நடமாடும் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க உதவ வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் புத்தாக்கத்தின் மூலம் ஒரு சாதனத்தை உரு வாக்கி இருக்கிறார்கள். சக்கர நாற்காலிகளில் இருப்போரை படுக்கை, கழிவறை போன்ற வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல பராமரிப்பாளர்களுக்கு அந்தக் கருவி உதவுகிறது. 'லாம்டாரோல்' என்று அதற் குப் பெயர். சக்கர நாற்காலியின் இரும்பு குழாயைப்போலவே ஏறக் குறைய அதே அளவில் புதிய சாதனம் இருக்கிறது. சக்கர நாற்காலியில் இருப்ப வர்கள் பராமரிப்பாளர்களின் உதவியுடன் எழுந்து அந்தச் சாதனத்தில் தங்களைப் பொருத் திக்கொள்ளலாம். தங்கள் கைகளை அந்தச் சாதனத்தில் இருக்கிபிடித்தபடி உடற்குறை யாளர்கள் இருக்க, பராமரிப் பாளர்கள் அவர்களை நடத்தியும் அழைத்துச் செல்லலாம்.
உடற்குறையாளர்கள் வாழ்வை எளிதாக்க மாணவர்கள் உருவாக்கிய புதிய சாதனம்
1 mins read

