பணிப்பெண் பாதுகாப்புக்கு முக்கிய மூன்று அம்சங்கள்

பணிப்பெண் பாதுகாப்புக்கு முக்கிய மூன்று அம்சங்கள்

1 mins read
8ba76b10-ce45-449c-b1d4-f304511f4df3
-

சிங்கப்பூரில் உயர்மாடி பாதுகாப்பு என்பது பணிப்பெண்களுக்கான மிகப் பெரும் கவலைகளில் ஒன் றாக இருக்கிறது. சன்னலி லிருந்து வெளியே ஏறி வருவது என்பது அறவே அனுமதிக்க முடியாத ஒன்று என்று 'ஐலண்ட் மெய்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் இயக்குநர் கேபிரியல் யீ தெரிவித்துள்ளார். புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட் டில் ஐந்தாவது மாடி கைப்பிடி சுவரிலிருந்து தொங்கிய ஒரு பணிப்பெண் புதன்கிழமை பாது காப்பாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் பற்றி கருத்து கூறியபோது, திரு கேபிரியல் இவ்வாறு குறிப்பிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித் துள்ளது. சிங்கப்பூருக்கு முதன்முதலாக பணிப்பெண்ணாக வருவோர், வேலையைத் தொடங்குவதற்கு முன்னதாக கட்டாயமாக ஒரு பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது ஒருபுறம் இருக்க, பணிப் பெண் நிறுவனங்கள் கூடுதலான பயிற்சியையும் அளிக்கின்றன. நினைவூட்டல்கள், போதிய பயிற்சி, முதலாளிகளுக்கும் பணிப்பெண்களுக்கும் இடையில் மேம்பட்ட தகவல் தொடர்பு இவை மூன்றும் பணிப்பெண் களின் உயர்மாடி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கியமாக இருக்கும் என்று 'நேஷனல் எம்பிளாய்மெண்ட்' என்ற நிறு வனத்தின் இயக்குநர் லிம் சீ சோங் கூறினார்.

புக்கிட் பாஞ்சாங்கில் புளோக்கின் ஐந்தாவது மாடியின் கைப்பிடி சுவரிலிருந்து தொங்கிய 24 வயது பணிப்பெண் மீட்கப்பட்டார். படம்: ‌ஷின் மின் வாசகர்